தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
தாயென்று கும்பிடடி பாப்பா
- கூடு... வீடு... வீடு...
Natarajan Kalpattu
கூடு கட்டாமலே குடும்பம் நடத்துது
தேனிசை பாடிடும் குயில்
நெல்லின் இலையினை
மெல்லிய நாராய்க் கிழித்தே
பின்னிடுதே அழகாய்த் தன்
கூட்டை பார்ப்பவர் வியந்திடத்
தூக்கணாங் குருவி
குச்சி கொண்டே கூடு
கட்டிடுது நாரை
குச்சில் கட்டிடுறான் ஏழை விவசாயி
வைக்கோலோ முடைந்த கீற்றினையோ கொண்டு
மச்சிலும் பல மாடிக் கட்டிடமும்
கட்டிடுறார் மாந்தர்
இவை யாவற்றினும் பெரியதொரு
வீடொன்று உண்டு அதுவே நாம்
இறுதியில் சென்றடைய வேண்டிய
பெரிய வீடு
பெரிய வீடு கட்டிடத் தேவை இல்லை
கல்லும் காரையும்
தேவை எல்லாம்
பிற உயிரிடத்தே அன்பும் பரிவும்
பிறர் உடலும் உள்ளமும் நோகாச்
செயல்கள் புரிதலும்
நடராஜன் கல்பட்டு
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||













