தாயென்று கும்பிடடி பாப்பா
- இட ஒதுக்கீடு
சீராசை சேதுபாலா
இட ஒதுக்கீடு விஷயத்தில் அக்கறை காட்டுபவர்களையும், ஏதோ அதில் சில % வெற்றி பெற்றபின் அதனைக் கொண்டாடுபவர்களையும் நினைத்தால் எனக்குச் சிரிப்புத்தான் வருகின்றது.
இந்திய பூமியில் பிறந்த ஒவ்வொரு மனித உயிர்ப் பிறப்பிற்கும் அது விரும்பியதைச் செய்திட முழு உரிமை உண்டு. இதுவே பொது விதியாக இருக்க வேண்டும்.
விரும்பியது என்பதற்கு விளக்கம் கேட்டால், உலகம் பழித்தொழிக்காத எல்லாச் செயல்களையும் என்று பொருள் கொள்தல் அவசியம்!
அதாவது விரும்பியோர் விரும்பியதைத் தொடர்ந்து படித்திட, இன, மத, மொழி பகுபாடற்ற நிலைமையில் வாய்ப்பும் வசதியும் வழங்கப் படல் வேண்டும்.
ஏழை, பணக்காரன் என்ற வேறு பாடற்ற முறையில் மேற்கூறிய வசதி ஏற்பட்டு விட்டால் இட ஒதுக்கீட்டால் என்ன பயன்?
உற்றார் உறவினர் இல்லாத பூமியில், உயிர் பிரியும் வேளையில், மாட்டிக் கொண்ட ஒருவனது தாகம் தீர்க்கப் பட அவனது இனத்தைச் சேர்ந்தவர்தான் வர வேண்டும் என்பது எதிர்பார்ப்பானால், அவனது தாகம் எப்படித் தணியும்?
அதே விதிதான் மனித வாழ்க்கைக்கும் பின்பற்றப் பட வேண்டும். மூன்று, நான்கு தலை முறைக்கு முந்திய மூதாதையர் பெயர் கூடத் தெரிந்து வைத்திராத நமக்கு, இனம் ஏது? மொழி ஏது? மதம் ஏது? எப்பொழுது இந்த்க் கொடுஞ்ச் சிந்தனைகள் மாறும்?
உலகில் இரண்டே இரண்டு ஜாதியர் தான் உண்டு. ஒன்று சைவம் உண்போர். மற்றொன்று அசைவம் உண்போர். இது கூட ஒரு நேரத்தில் தோற்றுப் போகும்.
ஆம்! சைவ- அசைவ உணவு வகைகளைக் கூட அனுசரித்துச் செல்லும் எத்தனையோ கணவன் - மனைவியர் பூவுலகில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
உடம்பும் உயிரும் ஏற்றுக் கொள்பவை எல்லாம் சைவம்;
உடம்பும் உயிரும் ஏற்றுக் கொள்ளாதவை எல்லாம் அசைவம்:
சர்க்கரை வியாதிக்காரனுக்கு அரிசி கூட அசைவம்தான்; சரிதானே தோழர்களே?
கல்வியும், வேலைவாய்ப்பும் எவருக்கும் மறுக்கப் படாத சமூகம் ஏற்பட்டு விட்டால் இட ஒதுக்கீடு எதற்காக?
அரசியல்வாதிகளுக்கும் ஓய்வு வயது-பதவி வகிப்பதில் உச்சவரம்பு கொண்டு வரப் படுதல் வேண்டும்.
விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறையில் தேர்தல் நடத்தப் பட வேண்டும்.
அந்த நிலை ஏற்பட்டுவிட்டால், கூட்டணி அரசியலுக்கு அவசியமே இருக்காது. இந்திய பூமியின் எல்லாப் பகுதிகளும்சரிசமமாகக் கவனிக்கப் பட்டுவிட்டால் மாநிலப் பிரிவுக் கோரிக்கைகளுக்கே அவசியம் ஏற்படாது.
எல்லாவற்றிற்குமே தேவையானது ம்னிதாபிமானச் சிந்தனைகள் தான்!
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||













