Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 
   
    என்னைப் பற்றி

Meet our Authors

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.


Easiest and Best

மழலைகள்

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
காலம் பொன்னானது
தமிழ்த்தேனீ

 

அன்புக் குழந்தைகளே,

காலம் என்பது நிறகாமல் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஓடும் பட்டை

அந்தப் பட்டையின் வேகத்துக்கு ஏற்ப நாமும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும், அப்போதுதான் நாமும் இந்த உலகத்தில் அனைவருடனும் போட்டி போட முடியும், முன்னேற முடியும். ஆகவே நேரம் தவறாமை என்பது எவ்வளவு முக்கியமான ஒன்று என்பதை நாம் எல்லோரும் உணர வேண்டும். நாம எல்லாரும் இது வரைக்கும் செலவழித்த நேரங்கள் இனி மீண்டும் வருமா? ஒவ்வொரு வினாடியும் காலம் நகர்ந்துகொண்டே இருக்கிறது.

அப்படிப்பட்ட பொன்னான நேரங்களை நாம் வீணடிக்கலாமா?

ஒரு நாளை நாம் எண்ணிப் பார்த்தால், மொத்தம் 24 மணி நேரம் இருக்கிறது, அந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட நாம் தூங்கி எழுந்து, பல் தேய்த்து, காலைக் கடன்களை முடித்து, குளித்து இவைகள் எல்லாம் செய்வதற்கே 12 மணி நேரம் தீர்ந்து போகிறது.

மீதி இருக்கும் 12 மணி நேரத்தில் நாம் என்ன செய்கிறோம்? வீட்டிலிருந்து கல்விக் கூடத்துக்கு செல்ல அரை மணி நேரம், கல்விக்கூடங்களில் படிப்புக்கென்று ஒதுக்கப்பட்ட நான்கு அல்லது ஐந்து மணி நேரம், மதிய உணவு இடைவேளையின் உணவு அருந்தி புதுப்பித்துக் கொள்ள அரை மணி நேரம், மற்றும் அங்கே விளையாட ஒரு மணி நேரம், பிறகு மீண்டும் வீட்டிற்கு வர அரை மணி நேரம். வீட்டிற்கு வந்து கை கால்கள், முகம் கழுவி மாலை உணவை முடிப்பதற்கு ஒரு அரை மணி நேரம், மீண்டும் கல்விக் கூடங்களில் படித்த, அளித்த வீட்டுப் பாடங்களை முடிக்க ஒரு அரை மணி நேரம், பிறகு காற்றாட விளையாடிவிட்டு வீட்டுக்கு வருவதற்குள் இன்னும் ஒரு மணி நேரம் ஓடிவிடுகிறது.

ஆக மொத்தம் ஒன்பதரை மணி நேரமும் செலவாகி விடுகிறது, நமக்கு இருக்கும் 12 மணி நேரத்தில் மீதி இருப்பது இரண்டரை மணி நேரம் மட்டுமே, இந்த இரண்டரை மணி நேரத்தில் நாம் கவனிக்க வேண்டிய எவ்வளவோ கடமைகள் இருக்கின்றன. உண்மையைச் சொன்னால் நமக்கு இருக்கும் கடமைகளை முடிக்க இந்த இரண்டரை மணி நேரம் போதவில்லை, ஆனால் இப்படிப்பட்ட நிலையில், நாம் ஒரு மணித்துளி கூட வீணாக்காமல் இருந்தாலே நமக்கு நேரம் போதமாட்டேன் என்கிறதே.

தனக்கு அளிக்கப்பட்ட எந்தக் கடமையையும் முடிக்காமல் வீணே தொலைக் காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டு நேரத்தை வீணடிப்பவர்களுக்கு அவர்களின் அன்றாடக் கடமைகளை முடிக்கக் கூட நேரம் கிடைக்காது என்பது தெரிகிறது,

ஆனால் நாம் வழும் வாழ்க்கை இயந்திரத்தனமாக இருக்காமல் ஒவ்வொரு வினாடியும் நம் ஆர்வத்தை தூண்டும்படி அமைய நாம் சில மணித்துளிகள் தொலைக் காட்சியைப் பார்க்கவும் வேண்டும், நம் பாடப் புத்தகங்கள் தவிர நம் அறிவுக்கும் ஆற்றலுக்கும் வலிமை தரும் நல்ல நல்ல பெரியோர்கள் எழுதி வைத்திருக்கும் புத்தகங்களையும் படிக்க வேண்டும்.

ஆகவே நமக்கு வீணடிக்க நேரமே கிடையாது என்பதை நாம் உணர்ந்து ஒவ்வொரு மணித்துளிகளையும் திட்டமிட்டு திட்டமிட்டு செலவழிக்க வேண்டும். நாம் உழைத்து சமாதிக்கும் பொருட்களுக்கு நாம் எவ்வளவு மதிப்பளிக்கிறோமோ, அதைவிடப் பலமடங்கு நேரத்துக்கு அளிக்க வேண்டும்.

நான் சொல்றது சரிதானே, அதுனாலே வாழ்க்கையில் நேரத்தை திட்டமிடுங்கள், இதுதான் நான் இன்னிக்கு உங்களுக்கெல்லாம் சொல்லிக் குடுக்கணும்னு நெனைச்சுகிட்டிருந்தேன், நாளைக்கு மீண்டும் சந்திக்கலாமா?

அன்புடன்
தமிழ்த்தேனீ



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  


Designed and maintained by AKR Consultants 


Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button

Web Informer Button