Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 

  என்னைப் பற்றி

Meet our Authors

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.
  They Link Us     Mazhalaigal Toolbar     Bookshop     SEND A GREETING     Weblinks        

Easiest and Best

மழலைகள்

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
நம்பினால் நம்புங்கள்
N. Balasubramanian

 

1. கிழக்கே பார்த்து உட்கார்ந்து சாப்பிட்டால் ஆயுள் விருத்தியாகும்.

2. பகல் சாப்பாட்டிற்கு முன் ஒரு பிடி சாதத்தை காக்கைக்கு போடுங்கள், காக்கை சனீஸ்வருடைய வாகனமாகையால் நலம் தரும்.

3. உள்ளங்கையின் அடிப்புறத்தில் பார்வதியும் மத்திய பகுதியில் சரஸ்வதியும், விரல் நுனிகளில் லக்ஷ்மியும் இருக்கிறார்கள்.எனவே காலையில் கண் விழித்ததும் முதலில் உங்கள் உள்ளங்கையை பாருங்கள்

4. கோவிலுக்கு உள்ளே செல்லும்பொழுது பிச்சைக்காரர்களுக்கு காசு போடுவது நல்லது. வெளியே வரும்பொழுது போடுவது சரியல்ல.

5. முழு இருட்டாக உள்ள அறையில் தூங்க்வதோ, தீபம் ஏற்றப்படாத சன்னதியில் வணங்க்குவதோ கூடாது.

6. பூஜை அறையில் தெய்வப்படங்களுக்கு அருகில் இறந்து போன முன்னோர்களின் படங்களை வைக்காதீகள். வேறு திசையை பார்த்தாற்போல் வைக்கலாம்.

7. பஞ்சுத் திரியை கொண்டு தீபம் ஏற்றுவது குடும்பத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தும்.

8. வெள்ளிக்கிழமையிலும், செவ்வாய் கிழமையிலும் பணத்தையோ பண்டத்தையோ இரவல் கொடுக்கக்கூடாது.

9. வீடானாலும், கொவிலானாலும் முதலில் வலது காலை வைத்து உள்ளே செல்லுங்கள்.

10. சனி பகவான் சன்னதியில் நேருக்கு நேர் நின்று பிரர்ர்த்திக்க கூடாது. ஓரமாக நின்றுதான் வணங்க வேண்டும். சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்வதும் கூடாது

11. கோவிலிருந்து திரும்பிய உடனே கை கால்களை அலம்பாமல் ச்ற்று நேரம் பொறுத்தே செய்யுங்கள்.

12. சஷ்டி தினத்தன்று முடி வெட்டிக்கொள்வது தமையனுக்கு ஆகாது.

13. எந்த நல்ல காரியத்தையும் ஈரத்துணியை உடுத்திக்கொண்டு செய்யக்கூடாது. ஈர உடையுடன் கோவிலுக்கு செகல்வதும் சரியல்ல

14. வீட்டின் நிலைப்படியில் உட்காருவது கூடாது. கோவிலின் நிலைப்படியில் கற்பூரம் ஏற்றக் கூடாது

15. தேங்காய் எண்ணெய் அல்லது இலுப்ப எண்னெய் கொண்டு தீபம் ஏற்றுவது ஐஸ்வரியத்தையும், ஆரோக்கியத்தையும், கொடுக்கும்

16. அர்ச்சனை பொருட்களை கோவிலுக்கு எடுத்து செல்லும்பொழுது இடது கையில் கொண்டு போகக்கூடாது. அர்ச்சனை பொருட்கள் கொண்ட பையோ, கூடையோ இடுப்புக்கு கீழே தொங்கக்கூடாது.

17. வாங்கியுள்ள் கடன்களுக்கு தவணைகளை செலுத்தும் போது, செவ்வாய் கிழமைகளில் செய்தால் சீக்கிரமே கடன் அடைப்பட்டுவிடும்.

18. அனுமனுக்கு ஸ்தோத்திரம் சொல்வதென்றால் அதை மூல நக்ஷத்ரம் உள்ள் தினத்தில் ஆரம்பியுங்கள் அதையும் காலை வேலையில் மட்டுமே சொல்லலாம்.

19. வெண்கல விளக்குகளில் தீபம் ஏற்றினால் பாவங்கள் விலகும்.

20. தீபத்தையோ,கர்பூரத்தையோ, ஊதுவத்தியையோ, வாயால் ஊதி அணைக்கக் கூடாது.

21. பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னி, வன்னி மரத்தில் குடி இருப்பதாக ஐதீகம். அந்த மரத்தின் அடியில் உள்ள் விநாயகரை வணங்குவது-எல்லாப் பேறுகளையும் தரும்.அதே போல் பஞ்ச பூதங்களில் ஒன்றான நீர், நெல்லி மரத்தில் இருக்கிற்து அங்குள்ள விநாயகரை வண்ங்குவதும் சிறப்பை கொடுக்கும்.

22. கோயில்களில் பிரதான வாசல் வழியேதான் நுழய வேண்டும் பக்க வாட்டிலோ, பின்புறத்திலோ உள்ள் வாசல்கள் வழியே நுழையக் கூடாது.

22. எத்தனை களைப்பக இருந்த போதிலும் கோவிலுக்குள்ளே படுத்துக்கொள்வதோ, தூங்குவதோ கூடாது..

ரா.கி. ரங்கராஜன் (26-12-09 டொ 1-1-2010) மாம்பலம் டைம்ஸில் எழுதியது.

பார்வமணி



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  





Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button

Designed and maintained by AKR Consultants