தாயென்று கும்பிடடி பாப்பா
- தந்தையர் தினம்
மழலைகள் ஆசிரியர் குழு
தந்தையர் தினம்
ஆளுயர மாலையெல்லாம் அண்டி உன்னை
வந்தடையும் ஆளுமை கொண்டவனே
ஆயிரம் தான் அம்மா செய்தாலும்
வாடா என் மகனே என்று வாயாற அழைத்து
தோள்களிலே தூக்கி வைத்து உயரத்தில்
எனை ஏற்றி வைத்து உயரத்தின் மேன்மையை
உணர்த்தியே என்னை உன்னத சிகரங்களைத்
தொட வைத்த உணர்ச்சிக் குவியலே
குருவாய் நின்று நீ உன் உன்னத குணங்களை
எமக்களித்தாய் அதனால் நானின்று தலை நிமிர்ந்து
வாழுகின்றேன், எனக்கோர் படைப்பையும் அளித்து
என்னை பல சாதனைகள் படைக்கவும் வழிகாட்டிய
பொன்னைப் போல் உண்மை என்றே பக்குவமாய்ப்
புரியவைத்து வாழ்க்கையின் ரகசியம் வகையாய் கற்பித்து
புத்தியில் ஏற்றத்தை இயல்பாய் ஏற்றி பூவுலகம் போற்றவே
வாழ்ந்திடும் சக்தியூட்டி வகை செய்த வாய்மைப் பொருளே
தாழ்ந்திடும்போதும் தைரியமாய் மீண்டு வர தைரியமும்
எனக்களித்து வாழும் வகை கற்பித்த ஞான குருவே,
சட்டம் போட்ட படத்தில் உங்களை என் மகனுக்கு
அறிமுகம் செய்து வைத்தேன் என் தந்தையென்று,
அவன் சொல்கிறான் அவனுடைய தாத்தாவாம் நீங்கள்
இன்று தந்தையர் தினமாம் இன்று மட்டுமல்ல என்றுமே
என்றுமே தந்தையர் தினம்தானே,
தாத்தாக்கள் தினமும் இதுதானே?
அன்புடன்
தமிழ்த்தேனீ
அப்பா நீ எங்கு பிறந்திருக்கிறாய்
மாலை அணிவித்தேன், ஆனால் மனத்திலோ கனம்
உன் தீக்ஷணக் கண்கள் என்னை நோக்கின.
நல்லாசிகள் எனக்குக் கிடைத்தன.
உன் பரந்த நெற்றி அறிவை குறித்தது.
என்னுடைய ஆசான் நீ, என் அறிவும் வளர்ந்தது
எழுவது வருடம் சுந்தர காண்டம் படித்தாய் நீ
ராமநாமத்துடன் உன் வாழ்வை முடித்தாய் நீ
என் தமிழ் வளர துணை நின்றாய் நீ.
சங்கீத நீர்வீழ்ச்சியில் குளிக்க வைத்தாய் நீ.
என்னை ஜோசிய வலையில்விழ வைத்தாய் நீ,
கோபமும் உண்டு கண்டிப்பும் உண்டு
பரிவும் உண்டு பாசமும் உண்டு
என் கழுத்தில் தாலி ஏற
உன் கண்கள் பனித்தன
உன் மடியில் நான் அமர
என் கண்களும் நிறைந்தன.
உன் வேதனை உன் முகத்தில்.
கடைமை முடித்த நிறைவு அகத்தில்.
பிறப்பென்றால் இறப்பும் உண்டு
தெரிந்த உண்மை இது ஆனாலும்
அப்பாவைப்போட்டோவில் காண இயலவில்லையே!
வாழ்க்கைச்சக்கரம் இப்படித்தான்.
தாமரை இலைமேல் நீர்த்துளி
சொல்வதும் இதையேதான்..
தந்தை தின வாழ்த்துகள்
விசாலம் ராமன்
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||













