தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
தாயென்று கும்பிடடி பாப்பா
- சிந்தனை செய்திடு நீ மனமே
Natarajan Kalpattu
சிந்தனை செய் மனமே
மேகம் கருப்பது எதனாலே
வானம் பொழிவது எதனாலே
சிந்தனை செய்திடு நீ மனமே
நிந்தனை விட்டொழி நீ தினமே
வானம் பொழிவது எதனாலே
சிந்தனை செய்திடு நீ மனமே
நிந்தனை விட்டொழி நீ தினமே
பூமி சுழல்வதுஎதனாலே
சூரியன் தோன்றி மறைவது எதனாலே
சிந்தனை செய்திடு நீ மனமே
நிந்தனை விட்டொழி நீ தினமே
இருள் வரின் தூக்கம் எதனாலே
தூங்கி விழிப்பின் சோர்வு நீங்கல் எதனாலே
சிந்தனை செய்திடு நீ மனமே
நிந்தனை விட்டொழி நீ தினமே
கன்று வரின் பால் சுரத்தல் எதனாலே
இறுதி வரை தாயின் பாசம் எதனாலே
சிந்தனை செய்திடு நீ மனமே
நிந்தனை விட்டொழி நீ தினமே
விதைத்த விதை முளைப்பது எதனாலே
முட்டைக் கரு குஞ்சாவது எதனாலே
சிந்தனை செய்திடு நீ மனமே
நிந்தனை விட்டொழி நீ தினமே
குயில் பாட் டிசைத்தல் எதனாலே
மயில் தோகை விரித்தாடல் எதனாலே
சிந்தனை செய்திடு நீ மனமே
நிந்தனை விட்டொழி நீ தினமே
நடராஜன் கல்பட்டு
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||













