Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all 


Meet our Authors

உள்ளே

இணையப் பாட்டி
ஆன்மீகம்
தெய்வீகம்
லௌகீகம்
கலைகள்
கல்வி
பொது அறிவு
நிர்வாகம்

Tamil-English bilingual webmagazine
Dedicated to Education of Children                                           Bring out the child in you...

To display talents of children and develop personality through stories, poems, songs etc. is our objective. Our contents meet the taste of elders also. A section on Tamil Computing and Learning guides the users to create Tamil contents in their personal computers and learn Tamil through Azhagi the Easiest and Fastest Tamil word processing and transliteration software.

Easiest and Best

மழலைகள்

தமிழ்த்திரு நாடுதன்னைப் பெற்ற எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா
ஊன்றுகோல்
ஜெயஸ்ரீ ஷங்கர்

 

மனம் நிறைய சந்தோஷ மத்தாப்பாய்
வெள்ளை சிரிப்பில் கொள்ளை கொள்ளும்
உன் கள்ளமில்லா குணத்தில் என் மனம் நிறைய...
அன்புக்கணை எறிந்தேன், உன் மனம் நோக்கி..

காத்திருந்தேன் மாதக் கணக்கில்
கணை என்றோ ஒரு நாள் கனியும் என்று
உன் மோகன மனம் மௌனமாய்
என் மனம் ஏற்ற அந்த பொன்னாளில்
நானே எனைப் பெற்றதாய்
பூரித்துப் போன தருணங்கள்

இவ்வுலகில் வேறெதுவும் வேண்டாததாய்
உனை மட்டுமே சுற்றி வந்த என் மனது
ஆதவனின் கரம் ஏந்தும் தாமரை போல்
உன் மனதில் ஏற்றி வைத்தாய் என் வரவை
ரசித்தாய் உன் சேய் போல், நெகிழ்ந்தேன் நான்
உன் வெள்ளை மனகோட்டையில்
முதல்வனாய் அமர்ந்த தருணம் முதல்

துன்பங்கள் எனை விட்டு தொலை தூரம் போனது
தேவதை உன் அருகாமை தந்த உறவால்
மனையாள் என ஒரு சொல்லால் சொல்லி விட முடியாது
பெண்ணுக்கான குணம் எதுவென்றால் உனை மட்டும்
எண்ண வைக்கும் நான் பெற்ற வரம் - உன்னையன்றி யார் தருவார்

தந்தாய் என் வாழ்விற்க்கொரு அர்த்தமதை
சிரித்தோம் சிலிர்த்தோம் சிநேகமாய்
ஒரு இல்லறத்தில் ஏற்றங்களும் இறக்கங்களும்
அன்பிர்க்கில்லை எனும் தத்துவத்தின்
பூரணத்துவம் கண்டோம்
தராசு போல் இருவர் நிலையும் ஒன்றாய்

கண்டேன் உலகம் அழகான மாளிகையாய்
பெற்றோம் நம் அன்பின் வரங்களை - மழலைகளாய்
இருவர் குணமும் ஒன்றாய் இருவர் மனமும் ஒன்றாய்
விட்டுக் கொடுக்காமல் அடங்கிப் போகாமல்
யதார்த்தமாய் ஆத்மார்த்தமாய் உன்னத வாழ்க்கை

எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தோம் நினைவில் இல்லை
கழிந்து விட்ட ஆண்டுகள் மீண்டும் மீண்டும் புது நாட்களாய்
பொலிவோடு வலம் வர உன் அழகு முகம் மட்டும்
சந்தோஷ ரேகையில் சித்திரமாய் என் கண் முன்னே

ஆண்டுகள் நமைத் தாண்டி எங்கோ சென்று விட்டாலும்
நம் பெயர் சொன்ன வாரிசுகள் அவர்தம் வாழ்வு தேடி
சென்று விட்டாலும் இன்றும் நம் பேரனும் பேத்தியும்
நம் அன்பு கண்டு மலைத்து நின்றாலும்

நம் பெயரே நமக்கு மறந்து போனது அதிசயம்
கண் பார்த்த ஜாடையிலே காரியம் முடிக்கும் உன் புரிதலும்
உன் ஒற்றை இருமலில் பதைத்துப் போகும் என் பரிவும்
யாருக்கும் வாய்க்குமோ இது போன்ற தாம்பத்யம்

திரும்பிப் பார்கிறேன் என் முதிர்ந்த முகத்தில்
இளமைகள் உதிர்ந்து போன என் முதிர்ந்த முகம்
முழுதும் உன் விரலின் ரேகைகள்

நாம் ஆசையாய் வாங்கிய அனைத்து சாமான்களும்
ஆண்டு பலவானதால் அங்கவீனமாய் அரையும் குறையுமாய்
சளைக்காமல் சலிக்காமல் நம் இரு மனம் மட்டும் என்றும் நேற்றாய்
மனதுக்கு முதுமை இல்லை எனும் இலக்கணத்தோடு
மனம் நிறைய பாசத்துடன் கண் நிறைய நேசத்தோடு

அந்த நாள் போல் உலகத்தில்
வேறெதுவும் வேண்டாததாகி
ரசனைகள் என்றும் போல் ஊற்றாகி
ஒருவருக்கொருவர் ஊன்றுகோலாய்
நம் மனம் நிறைய சந்தோஷ மத்தாப்பாய்!

ஜெயஸ்ரீ ஷங்கர்.



PLEASE GIVE YOUR FEEDBACK


*Name:         

*E-mail:        

*Comments:  





Give your Feedback: Feedback     Take a Quiz

Free Software Every Day Happy Birthday
Designed and maintained by AKR Consultants



Web Informer Button

Designed and maintained by AKR Consultants