தாயென்று கும்பிடடி பாப்பா
- தொல்காப்பியம் தொடங்கி
முத்து. இராமமூர்த்தி
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த தமிழில் காணக் கிடைக்கின்ற நூல்களில் மிகப் பழமையானதான தொல்காப்பியம் ஓர் இலக்கண நூலாகும். அது மொழிக்கு இலக்கணம் கூறுவதோடு அம்மொழியினைப் பேசும் மக்களின் வாழ்வுக்கும் இலக்கணம் கூறியிருப்பதைக் காணும்போது வியப்பு மேலிடாமல் இருக்க முடியாது. மக்களின் அக மற்றும் புற வாழ்க்கைக்குப் பொருள் இலக்கணம் கூறும் தொல்காப்பியத்தில் வாழ்வியலுக்கு உதவும் மேலாண்மை பற்றிய செய்திகள் கூறப்படுவதும் இயல்புதானே!
போர்முறைக்குக் கூட தொல்காப்பியப் புறத் திணையியல், இலக்கணம் கூறி இன்றைய காவல் படை மேலாண்மைத் தத்துவங்களுக்கு முன்னோடியாகப் பல பயனுள்ள துட்பமான செய்திகளைத் தந்திருக்கிறது - வெட்சி, வஞ்சி, உழிஞை, காஞ்சி, தும்பை, வாகை, பாடாண் என ஏழு திணைகளாகப் பகுக்கப்பட்டும் ஒவ்வொரு திணையும் பல துறைகளாக விரிக்கப்பட்டும் போர் நிலைகள் விளக்கப்பட்டு போர் முறைகள் விரிக்கப்படுகின்றன.
முடியாட்சிக் காலம் என்பதால் மன்னனையே தலைவனாகக் கொடு புற வாழ்க்கை இலக்கணம் கூறப் பட்டுள்ளது. ஆட்சியே பெரிய மேலாண்மை, அரசரே மிகப் பெரிய மேலாளர் அன்றோ! மன்னனின் சிறப்பைக் கூறும் நாடு வாழ்த்து, வீற்றினிதிருத்த பெருமங்கலம், பொலிவுமங்கலம், பரிசில் நிலை, வாயுறை வாழ்த்து, செவியறிவுறாஉ, புறநிலை வாழ்த்து முதலிய துறைகள் எல்லாம் அரசனின் ஆட்சித் திறம், வள்ளன்மை, வீரம், புகழ் முதலியனவற்றைக் கூறினாலும் அவைகள் பொதுவாக மேலாண்மையின் திறம் வெளிப்பாடுகளாகவே கொள்ள வேண்டும்.
தொல்காப்பியம் மட்டுமின்றி தொல்காப்பியத்திற்குப் பின்னர் தோன்றிய இலக்கண தூல்களான புறப்பொருள் வெண்பாமாலை, நன்னூல், தண்டியலங்காரம் முதலியவற்றிலும் அவைகளுக்கு உரையாசிரியர்கள் வழங்கியுள்ள விளக்கங்களிலும் கூட மேலாண்மை பற்றிய பல செய்திகள் காணக் கிடைக்கின்றன.
தூல்கள் மட்டுமின்றி வரலாற்றைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் கல்வெட்டுக்களும் மேலாண்மை பற்றிய பல செய்திகளை உள்ளடக்கி விளங்குகின்றன.
அன்றைக்கு அரசனுக்கு உதவ ஐம்பெருங்குழு, எண்பேராயம் என்ற இரண்டு ஆட்சிப் பேரவைகள் இருந்ததை அறிகிறோம். அமைச்சர், புரோகிதர், படைத்தலைவர், தூதுவர், சாரணர் ஆகியோர் ஐம்பெருங்குழுவின் உறுப்பினர்கள். எண்பேராயத்தில் கரணத்தியலவர், கருமலிதிகள், கனகச் சுற்றம், கடைகாப்பாளர், நகர மாந்தர், படைத்தலைவர், யானை வீரர், குதிரை வீரர் ஆகியோர் அடங்குவர். இங்ங்னம் பெரும் மேலாண்மையான அரசாட்சிக்கு உதவக்கூடிய வகையில் மிகவும் இன்றியமையாத துறைகளைச் சார்ந்தவர்களை உறுப்பினர்களாகக் கொண்டு ஆட்சிப் பேரவை இயங்கியதைக் கண்டு வியக்கிறோம். இன்று சட்டமன்றப் பேரவை, மேலவை என ஒரு பெரும் அமைப்புகளாக இருந்து அரசை இயக்குவிக்கின்ற நிலையினை, பண்டைய தமிழர் ஆட்சி முறையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழரின் ஆட்சித் திறனைக்கண்டு தம் உள்ளம் மகிழ்கிறது. அமைச்சர், கண்காணி, கணக்காயன், கருணீகர் கரணத்தான், ஆவணக்களறி, மேல்முறையானர், ஒற்றன் எனப் பல்வேறு பணியாளர்கள் விளங்கினர். பல்வேறு தொழில்களை மேற்கொண்ட இவர்கள் தமிழிலும் புலமை மிக்கவர்களாக விளங்கி பல கவிதைகளைப் ப்டைத்ததை சங்க இலக்கியங்கள் ப்றைசாற்றுகின்றன.
மதுரை கணக்காயர் மகனார் நக்கீரனார், மருத்துவன் தாமோதரனர், கூலவாணிகள் சீத்தலைச் சாத்தனார். மதுரை அறுவை வணிகன் இளவேட்டனார் போன்ற தொழிலின் அடிப்படையிலேயே அமைந்திருப்பதைக் காண்கிறோம்.
இங்ங்னம் பண்டைத் தமிழகத்திலேயே, பல்வேறு தொழில்களும் அத்தொழில்களைச் செய்து வெற்றி காண்கின்ற சிறந்த மேலாண்மையும் இருந்தது என்பது உறுதியாகிறது
| |||||||
| Give your Feedback: Feedback Take a Quiz | |||||||
![]() ![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
| Free Software Every Day | Happy Birthday | ||||||
| Designed and maintained by AKR Consultants | |||||||














